
தெலுங்கு திரையுலகின் முன்னணி மற்றும் மூத்த நடிகர்களில் ஒருவர் பாலகிருஷ்ணா. இவரது நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘அகண்டா’ கடந்த 2-ஆம் தேதி வெளியாகி இருந்து. ‘அக்கட தேசமான’ தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் ‘அகண்டா’ திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

முதல் நான்கு நாட்களில் 53 கோடி ரூபாய் வசூலை தெலுங்கு மொழி பேசப்படும் இந்தியாவின் இரண்டு மாநிலங்களில் வசூலித்துள்ளதாம் இந்த திரைப்படம். வெளிநாடுகளில் முதல் வார வசூலாக பல லட்சம் அமெரிக்க டாலர்கள் வசூலித்துள்ளதாம் இந்த திரைப்படம்.
அதே நேரத்தில் இந்த படத்தின் வெற்றியினால் இந்த வாரம் வெளியாக இருந்த தெலுங்கு மொழி திரைப்படங்கள் சில தனது வெளியீட்டு தேதியை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் அகண்டா திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இயக்குனர் போயப்பட்டி ஶ்ரீனு உடன் மூன்றாவது முறையாக அகண்டாவில் இணைந்துள்ளார் பாலகிருஷ்ணா. இதற்கு முன்னதாக இவர்களது காம்போவில் வெளியான லெஜெண்ட் மற்றும் சிம்ஹா என இரண்டு படங்களும் மெகா ஹிட் அடித்த திரைப்படங்களாகும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3GgCCqz



0 Comments