Ad Code

Responsive Advertisement

கவனம் ஈர்க்கும் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் ‘ரைட்டர்’ டீசர்

பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்துள்ள ‘ரைட்டர்’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரடொக்சன்ஸ் சார்பாக மாரி செல்வராஜ், லெனின் பாரதி, அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஜேக்கப், சுரேஷ் மாரி ஆகிய 5 இயக்குநர்களின் படங்களை தயாரிப்பதாக அறிவித்தார். இந்த 5 படங்களையும் நீலம் புரடொக்ஷன்ஸுடன் லிட்டில் ரெட் கார்டு ஃபிலிம்ஸ், கோல்டன் ரேஷன் ஃபிலிம்ஸுடன் இணைந்து தயாரிக்கின்றன.இந்த 5 இயக்குநர்களின் படங்களில் முதலாவதாக பிராங்க்ளின் ஜேக்கப்பின் ‘ரைட்டர்’ திரைப்படத்தின் அறிவிப்பும் படப்பிடிப்பு புகைப்படங்களும் சமீபத்தில் வெளியானது. இதில், சமுத்திரக்கனி நாயகனாக நடித்துள்ளார். '96' படப் புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டாக்டர் அம்பேத்கர் பிறந்தாநாளில் வெளியானது. சமுத்திரக்கனியின் போஸ்டரும் அம்பேத்கரை நினைவூட்டியது. எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ள இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வரும் டிசம்பர் 24 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.

image

இந்த நிலையில், இன்று டீசர் வெளியாகி இருக்கிறது. டீசரில் பின்புறமாக காட்டப்படும் சமுத்திரக்கனி அம்பேத்கரை நினைவூட்டுகிறார். அவர் கண்ணாடியும் கெட்டப்பும் திரும்பத் திரும்ப அம்பேத்கரை நினைவூட்டுகின்றன. நேர்மையான ரைட்டர் தங்கராஜாக நடித்துள்ள சமுத்திரக்கனி காவல்நிலையத்தில் உயரதிகாரிகள் எழுதச் சொல்வதை அப்படியே எழுதும் ரைட்டராய் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களின் வெளிச்சத்தையூட்டும் லைட்டராய் நடிப்பில் வெய்ட் காட்டியுள்ளார்.

’சர்வீஸ்ல இருக்கவரை பொத்திக்கிட்டு இரு. போலீஸ் வேலைக்கு வந்துட்டு புரட்சி வேலை பண்ணிட்டிருக்கக்கூடாது’... ’போலீஸ்ல அதிகாரத்துல இல்லாத எல்லாருமே அடியாள்தான்... நான் பழைய அடியாள் நீ புதுசா வந்திருக்க அடியாள்... அவ்வளவுதான்’ போன்ற வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3GjPH2w

Post a Comment

0 Comments