Ad Code

Responsive Advertisement

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ‘ராக்கி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரித்துள்ள ‘ராக்கி’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

‘தரமணி’ நடிகர் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ராக்கி’ படத்தை செல்வராகவன் நடிக்கும் ‘சாணிக்காயிதம்’ படத்தை இயக்கிவரும் அருண் மாதேஸ்வரன் இயக்கி முடித்துள்ளார். இவர், கடந்த 2011-ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாகி சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய விருதை வென்ற ‘ஆரண்ய காண்டம்’ படத்தில் உதவி இயக்குநராகவும், ‘இறுதிச்சுற்று’ படத்தில் டயலாக் போர்ஷனை எழுதியும் பணியாற்றியவர்.

image

இந்நிலையில், இவர் இயக்கியுள்ள ‘ராக்கி’ படத்தை தங்களது ‘ரெளடி பிக்சர்ஸ்’ சார்பாக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தயாரித்துள்ளார்கள். சமீபத்தில், இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், படம் வரும் டிசம்பர் 23 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/31rkV98

Post a Comment

0 Comments