
சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடிகை ராதிகா இணைந்துள்ளார்.
’சூரரைப் போற்று’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ’சூர்யா 40’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண் உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர். சமீபத்தில் சூர்யா பிறந்தநாளையொட்டி ’எதற்கும் துணிந்தவன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது.
Morning coffee, workout amd chat with the handsome @Suriya_offl ,perfect morning ❤️❤️ pic.twitter.com/WQr177udBd
— Radikaa Sarathkumar (@realradikaa) August 11, 2021
இந்த நிலையில், நடிகை ராதிகா ’எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பில் இணைந்துள்ளார். திரைத்துறைக்கு வந்து 43 ஆண்டுகள் ஆனதையொட்டி நேற்று அருண் விஜய்யுடன் ‘அருண் விஜய் 33’ படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டடிய ராதிகா தற்போது ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பில் இணைந்திருக்கிறார்.
காலையில் சூர்யாவுடன் காஃபி அருந்தும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திலும் ராதிகா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3yHkEtV



0 Comments