
உக்ரைனில் நடந்துவரும் ராஜமெளலியின் ’ஆர்ஆர்ஆர்’ படத்தின் ’நட்பு’ பாடலுக்காக ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இணைந்துள்ளனர்.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 13-ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகிறது. 90 சதவீத படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் தடைப்பட்டது. தற்போது மீண்டும், உக்ரைனில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பையும் ’நட்பு’ பாடலையும் எடுக்க கடந்த வாரம் உக்ரைன் சென்றது படக்குழு.
இந்த நிலையில், சமீபத்தில் ஐந்து மொழிகளில் வெளியான ’ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நட்பு’ பாடலுக்காக படப்பிடிப்பில் இணைந்துள்ளனர் நடிகர் ராம் சரணும் ஜூனியர் என்.டி.ஆரும். இருவரும், ‘நட்பு’ பாடலைக் கேட்டுக்கொண்டே படப்பிடிப்புத் தளத்திற்கு உற்சாகமுடன் செல்லும் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளப் படக்குழு “நீங்களும் உங்கள் நண்பர்களும் இந்தப் பாடலை கேட்கும் வீடியோவை பகிருங்கள்” என்று ரசிகர்களிடமும் கேட்டுள்ளனர்.
நட்பை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த பாடலை ஐந்து மொழிகளை சேர்ந்த பிரபல பாடகர்கள் பாடியிருக்கின்றனர். தமிழில் அனிருத்தும், மலையாளத்தில் விஜய் யேசுதாஸும், ஹிந்தியில் அமித் திரிவேதியும், தெலுங்கில் ஹேமச் சந்திராவும், கன்னடத்திலும் யசின் நசிரும் பாடியுள்ளனர்.
ராம் சரண் மற்றும் ஜூனிய என்.டி.ஆர் படப்பிடிப்புத் தளத்திற்கு காரில் செல்லும் வீடியோவைக் காண: https://twitter.com/RRRMovie/status/1425345385250230277?s=20
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3sf5rxN



0 Comments