
நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
பைக் ரைடிங்கில் ஆர்வம் உள்ள நடிகர் அஜித் தனது பலப் படங்களில் பைக் சேசிங் சீன்களை வைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். இதற்காகவே, இளைஞர்கள் அஜித்தை கொண்டாடுகிறார்கள். ’நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப்பின் அஜித் கடந்த 2019 ஆண்டு முதல் எச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரது புகைப்படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில் பைக்கில் சீறிப்பாயும் ’வலிமை’ படத்தின் முதல் புகைப்படம் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் மோஷன் டீசரிலும் பைக் ரேசிங்கை மையப்படுத்தியே வெளியிட்டிருந்தார்கள். அடுத்தமாதம் முதல் பாடல் வெளியாகும் என்று சொல்லப்படும் நிலையில் அஜித்தின் கவனம் ஈர்க்கும் பைக் ரைடிங் புகைப்படங்கள் வெளியாகி ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளன. இந்தப் புகைப்படங்கள் வடக்கிழக்கு மாநிலமான சிக்கிமில் எடுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/36SRqMq



0 Comments