
அருள்நிதி நடிக்கும் 15-வது திரைப்படத்தை 'எரும சாணி' யூடியூப் குழுவினர் இயக்குகின்றனர்.
தமிழ் சினிமாவில் 'வம்சம்' திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் அருள்நிதி. இவர் 'மௌனகுரு', 'டிமான்டி காலனி' உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் தரமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்தநிலையில் அருள்நிதி நடிப்பில் உருவாகும் 15-வது திரைப்படத்தை 'எரும சாணி' யூடியூப் குழுவினர் இயக்குகின்றனர். குறிப்பாக அந்த குழுவை சேர்ந்த விஜய் குமார் ராஜேந்திரன் இயக்குநர் பொறுப்பை ஏற்றுள்ளார். D-Block என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கான முதல் பார்வையை இயக்குநர் பாண்டிராஜ் வெளியிட்டுள்ளார். இவர் வம்சம் திரைப்படம் மூலமாக அருள்நிதியை நாயகனாக அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/36PFJWJ



0 Comments