
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'நெற்றிக்கண்' திரைப்படம் நேரடியாக ஓ.டி.டியில் வெளியாகிறது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் 'நெற்றிக்கண்'. இந்த திரைப்படத்தை அவள் படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இதற்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது. ஆனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டதால் 'நெற்றிக்கண்' திரைப்படத்தை வெளியிட முடியவில்லை.
இந்த நிலையில் நேரடியாக ஓ.டி.டியில் வெளியிட விக்னேஷ் சிவன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இதனைத்தொடர்ந்து, 'நெற்றிக்கண்' திரைப்படத்தை ஓ.டி.டி உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பையும் அந்த நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் விரைவில் நெற்றிக்கண் திரைப்படம் வெளியாக உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/36Qp3P6



0 Comments