Ad Code

Responsive Advertisement

”ஏ.ஆர்.ரஹ்மானை எனக்கு யார் என்றே தெரியாது”- தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா

ஏ.ஆர். ரஹ்மானை தனக்கு யாரென்றெ தெரியாது என்று தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா கூறியுள்ளார்.

ஆந்திராவின் ’சூப்பர் ஸ்டாரும்’, ’தெலுங்கு தேசம்’ கட்சியின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான டி.என் ராமாராவின் மகன் பாலகிருஷ்ணா தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். தெலுங்கு நடிகராக இருந்தாலும் இவரது படங்களும், படத்தின் காட்சிகளையும் பார்த்து ரசிப்பதற்கென்றே தமிழிலும் ரசிகர் கூட்டம் இருக்கிறது.

image

இந்த நிலையில், பாலகிருஷ்ணா சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் ”ஏ. ஆர். ரஹ்மான் என்பவர் ஆஸ்கர் விருது வாங்கி இருக்கலாம், ஆனால், அவர் எனக்கு யார் என்றே எனக்கு தெரியாது. பாரத ரத்னா போன்ற விருதுகள் என்.டி.ஆரின் கால் விரலுக்கு சமம்.
மேலும், எந்தவொரு உயரிய விருதும் என்னுடைய குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது” என பேசியுள்ளார். அவரின், இந்தப் பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மானின் ரசிகர்கள் மீம்ஸ்களிலும், ஸ்டேட்டஸ்களிலும் அவரின் பேச்சைக் கண்டித்து தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.

பாலகிருஷ்ணா பேசும் வீடியோ இணைப்பைப் பார்க்க: https://twitter.com/UNCR0WNEDKlNG/status/1417521601730334723?s=20

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3wVuLte

Post a Comment

0 Comments