
’வலிமை’படத்தின் வெளியீட்டுத் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடியாத நிலையில் தள்ளிப்போனது. தற்போது படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளதால், தற்போது முக்கியமான இணைப்புக் காட்சிகளை ஹைதராபாத்தில் எடுத்து முடித்தது படக்குழு. அடுத்ததாக 5 நாட்கள் சண்டைக் காட்சியை வெளிநாட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளார்கள்.

இந்த நிலையில், ’வலிமை’ படத்தின் முதல் பாடல் அடுத்தமாதம் வெளியாவதோடு, வெளியீட்டுத் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரை படக்குழு அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி ‘வலிமை’ வெளியாகும் என்று கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3kGbwle



0 Comments