Ad Code

Responsive Advertisement

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு தொடர்ச்சியாக வரி விலக்கு அளிக்கும் மாநிலங்கள்

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு பாஜக ஆளும் மாநிலங்களில் அடுத்தடுத்து வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மற்ற மாநிலங்களில் வரி விலக்கு கோரிக்கையும் வைக்கப்பட்டு வருகிறது.

கடந்த 1990-ம் ஆண்டின் துவக்கத்தில், ஜம்மு - காஷ்மீரில் வாழ்ந்துவந்த இந்து பண்டிட்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பயங்கரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து தப்பி, நாட்டின் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வருவது ஆகியவற்றை மையமாகக் கொண்டு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

பிரபல பாலிவுட் இயக்குநரான விவேக் அக்னி ஹோத்ரி இயக்கிய இந்தப் படம், பல்வேறு சட்டப் பிரச்சனைகளை தாண்டி கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப் படத்தில், அனுபம் கெர், விவேக் அக்னி ஹோத்ரியின் மனைவி பல்லவி ஜோஷி, மிதுன் சக்ரவர்த்தி, தர்ஷன் குமார், பாஷா சும்ப்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

image

படம் வெளியானது முதல் விமர்சன ரீதியாகவும், வசூல்ரீ தியாகவும் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களில் இந்தப் படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்தியப் பிரதேசம், கோவா, ஹரியானா, குஜராத், கர்நாடகா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்தியப் பிரதேச மாநில அரசு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘90-களில் காஷ்மீர் இந்துக்கள் எதிர்கொண்ட வலி மற்றும் போராட்டத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறது. இந்தப் படத்தை அதிகமான மக்கள் பார்க்க வேண்டும் என்பதால் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பீகார், டெல்லி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும், இந்தப் படத்துக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/85TyuEP

Post a Comment

0 Comments