பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்துள்ள ‘ரைட்டர்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரடொக்சன்ஸ் சார்பாக மாரி செல்வராஜ், லெனின் பாரதி, அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஜேக்கப், சுரேஷ் மாரி ஆகிய 5 இயக்குநர்களின் படங்களை தயாரிப்பதாக அறிவித்தார். இந்த 5 படங்களையும் நீலம் புரடொக்ஷன்ஸுடன் லிட்டில் ரெட் கார்டு ஃபிலிம்ஸ், கோல்டன் ரேஷன் ஃபிலிம்ஸுடன் இணைந்து தயாரிக்கின்றன.
இந்த 5 இயக்குநர்களின் படங்களில் முதலாவதாக பிராங்க்ளின் ஜேக்கப்பின் ‘ரைட்டர்’ திரைப்படத்தின் அறிவிப்பும் படப்பிடிப்பு புகைப்படங்களும் சமீபத்தில் வெளியானது. இதில், சமுத்திரக்கனி நாயகனாக நடித்துள்ளார். பா.ரஞ்சித்தின் 'காலா' படத்தில் சமுத்திரகனி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. '96' படப் புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைகிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டாக்டர் அம்பேத்கர் பிறந்தாநாளில் வெளியானது. சமுத்திரகனியின் போஸ்டரும் அம்பேத்கரை நினைவூட்டியது குறிப்பிடத்தக்கது. எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ள இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வரும் டிசம்பர் 24 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3EpztEk
0 Comments