நெட்ஃப்ளிக்ஸில் ஹிட்டடித்த 'மணி ஹெய்ஸ்ட்' (Money Heist) வெப் சீரிஸின் ஐந்தாவது சீசனின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகியுள்ளது.
முன்னதாக ஐந்தாவது சீசனின் முதல் பாகத்தில் ஐந்து எபிசோடுகள் வெளியாகியிருந்தன. தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாம் பாகத்தில் ஐந்து எபிசோடுகள் உள்ளன. ஒவ்வொரு எபிசோடும், 50 நிமிடங்களையொட்டி இருக்கிறது. ‘இழப்பதற்கு ஒன்றுமேயில்லை’ என வாழும் எட்டு கொள்ளைக்காரர்களை சுற்றி நிகழும் கதைதான் ‘மணி ஹெய்ஸ்ட்'.
தொடர்புடைய செய்தி: பெர்லின் ஹீரோவாக ‘மணி ஹெய்ஸ்ட்’ அடுத்தப்பாகம்: அதிகாரபூர்வ அறிவிப்பு
‘மணி ஹெய்ஸ்ட்’-ன் 5-ம் சீசனின் இரண்டாம் பாகம் மட்டுமன்றி, இதற்கு முன்பு சீரிஸில் நடந்த முக்கியமான விஷயங்களையும் மக்களுக்கு எளிமையாக விளக்கும் வகையில், நெட்ஃப்ளிக்ஸ் தரப்பிலிருந்து தமிழில் யூ-ட்யூப் வீடியோன்றும் வெளியாகியுள்ளது. நடிகரும் வர்ணனையாளருமான ஆர்.ஜே.பாலாஜி தொகுத்து வழங்கியுள்ள அந்த வீடியோவில், ‘மணி ஹெய்ஸ்ட்’டின் முன்பகுதி முழுவதுமாக சொல்லப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 8 நிமிடங்களில் மொத்த கதையையும் தனக்கே உரிய பாணியில் சொல்கிறார் ஆர்.ஜே. பாலாஜி.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3dmugB7
0 Comments