நடிகர் விக்ரம் - துருவ் விக்ரமின் ‘மகான்’ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளன.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் விக்ரம் 'மகான்' படத்தில் இணைந்து நடித்து முடித்துள்ளனர். இந்த ஆண்டின் துவக்கத்தில் கொடைக்கானலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், நேபாள எல்லை உள்ளிட்ட இடங்களில் நிறைவுப்பெற்றது. சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'மகான்' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
படம் வரும் பிப்ரவரி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் - துருவ் விக்ரம் டப்பிங் பேசும் புகைப்படத்தைப் பகிர்ந்து உற்சாகமுடன் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/31mv3zP
0 Comments