Ad Code

Responsive Advertisement

விஜய் ஆண்டனியுடன் கைகோர்க்கும் சரத்குமார் - விஜய் மில்டன் சொல்லும் சுவாரஸ்யம்!

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சரத்குமார் இணைந்துள்ளார்.

'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது', 'கோலிசோடா', 'கடுகு' உள்ளிட்டப் படங்களை இயக்கியவர் விஜய் மில்டன். தற்போது கன்னட முன்னணி நடிகர் சிவராஜ் குமார் நடிக்கும் 'பைராகி' படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்தாக விஜய் ஆண்டனியை வைத்து 'மழை பிடிக்காத மனிதன்' படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் தற்போது சரத்குமார் இணைந்துள்ளார்.

விஜய் மில்டனுடன் இணையும் விஜய் ஆண்டனி - Vijay Milton to direct Vijay Antony

இது தொடர்பாக விஜய் மில்டன் கூறுகையில், ''படத்தில் சரத்குமார் மற்றும் விஜய் ஆண்டனி நண்பர்களாக இருப்பார்கள். ஒருக்கட்டத்தில் இருவரும் எதிரெதிர் நிலைபாடு எடுக்கும் சூழல் உருவாகி மோதல் முற்றுகிறது'' என்றார்.  படத்தின் இப்படியொரு தலைப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து அவர் கூறுகையில், ''டைட்டிலுக்கு என்று தனியாக எந்த காரணமும் இல்லை" என்றார்.

இருப்பினும், படத்தில் ஹீரோவுக்கு மழை ஏன் பிடிக்கவில்லை என வெளிப்படையாக வார்த்தைகள் மூலமாகவோ, காட்சிகள் மூலமாகவோ விளக்கவில்லை. ஆனாலும், பார்வையாளர்களால் படம் முடிந்ததும் அதற்கான காரணத்தை உணர முடியும்'' என்றார். டையூ மற்றும் டாமன் ஆகிய இடங்களில் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இதற்கான டிசம்பர் மாசம் படக்குழு அங்கு செல்ல இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு முடியும் என தெரிகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3CY8leR

Post a Comment

0 Comments