
சாஹோ, ராதே ஷியாம் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பு நிறுவனமான யூவி கிரியேஷன்ஸ் அனுஷ்காவுடனான தனது மூன்றாவது திரைப்படத்தை அறிவித்ததுள்ளது.
நடிகை அனுஷ்கா ஷெட்டியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து அவரின் அடுத்த புதிய படத்துக்கான அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. சாஹோ, ராதே ஷியாம் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பு நிறுவனமான யூவி கிரியேஷன்ஸ் அனுஷ்காவுடனான தனது மூன்றாவது திரைப்படத்தை அறிவித்துள்ளது.

காணொலி ஒன்றின் வாயிலாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம், ''2013-ம் ஆண்டு மிர்ச்சி திரைப்படத்தில் ''அழகு ராணி''-யாக நமது உள்ளங்களை கொள்ளை கொண்டார் அனுஷ்கா. 2018-ல் பாகமதியில் ''அச்சமில்லா அரசி''-யாக நம்மை ஆட்கொண்டார். தற்போது, அனுஷ்கா ஷெட்டியும் யூவி கிரியேஷன்ஸும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். அனுஷ்காவின் 48-வது (#Anushka48) படமான இந்த நவீன கால பொழுதுபோக்கு சித்திரத்தை மகேஷ் பாபு பி எழுதி இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூவி கிரியேஷன்ஸ், அனுஷ்கா கூட்டணியில் உருவான பாகமதி எவ்வாறு நான்கு மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றதோ, அதே போல் இப்படத்தையும் நான்கு மொழிகளில் தயாரித்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், மகேஷ் பாபு பி இயக்கத்தில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தின் தலைப்பு, இதர நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3kikILv



0 Comments