Ad Code

Responsive Advertisement

மீண்டும் துவங்கும் கமல்ஹாசன் - ஷங்கரின் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு

கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவான ‘இந்தியன் 2’ படப்பிரச்சனை சுமூகமாக நிறைவடைந்ததால் மீண்டும் படப்பிடிப்பை துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்க கடந்த 2019-ல் தொடங்கப்பட்ட திரைப்படம் ’இந்தியன் 2’. பெரும் எதிர்பார்ப்போடு தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு 60 விழுக்காடு நிறைவடைந்த நிலையில், கிரேன் விபத்தால் இயக்குநருக்கும், தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையே நடந்த கருத்து வேறுபாட்டால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் இந்தப் பிரச்சனை நீதிமன்றத்துக்கு செல்ல, ஓய்வு பெற்ற நீதிபதி பானுமதி தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

image

ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியின் மத்தியஸ்த நடைமுறையின்போது, ஷங்கர் வேறு படம் இயக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்த போவதில்லை என்று லைகா தெரிவித்துள்ளது. ஷங்கர் தரப்பில் ‘இந்தியன் 2’ படத்தை முடித்துக்கொடுக்கிறேன் என்றும் ஏற்கனவே ஒத்துக்கொண்ட படங்களை முடிக்க அனுமதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டது. இரண்டு தரப்புக்கும் பிரச்சனை சுமூகமாக முடிந்துள்ளதால், மீண்டும் ‘இந்தியன் 2’ படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார் ஷங்கர்.

 இதுவரை ‘இந்தியன் 2’ படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதால் மீதமுள்ள 40 சதவீத படப்பிடிப்பை டிசம்பர் மாத நடுவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீண்டும் துவங்கும் படப்பிடிப்புக்காக கமல்ஹாசன் 100 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.  கடந்த வாரம்தான், ஷங்கர் ‘ராம் சரண் 15’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பை புனேவில் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3CVkQYJ

Post a Comment

0 Comments