Ad Code

Responsive Advertisement

சிம்பு-கெளதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ : மும்பையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இயக்குநர் கெளதம் மேனன் லொகேஷன் பார்க்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

’விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படத்திற்குப் பிறகு சிம்பு - கெளதம்மேனன்  'வெந்து தணிந்தது காடு' படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் 47-வது படமாக எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

image

தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். முற்றிலும் கிராமத்து பின்னணியில் வித்தியாசமான ஆக்‌ஷன் த்ரில்லரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, திருச்செந்தூரில் தொடங்கி தற்போது மும்பையில் நிறைவடைய இருக்கிறது.

image

இதற்காக சிம்பு, கெளதம் மேனன் உள்ளிட்டப் படக்குழு சமீபத்தில் மும்பை சென்றுள்ளது. அங்கு 25 நாட்கள் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடத்துவதற்கான படப்பிடிப்புத்தள இடங்களை இயக்குநர் கெளதம் மேனன் படக்குழுவினருடன் சென்று பார்வையிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3og3qjm

Post a Comment

0 Comments