
பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ டீசர் வெளியான 25 மணிநேரத்தில் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை செய்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘சாஹோ’ படத்திற்குப் பிறகு பிரபாஸ், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில்‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா என பலரும் நடித்துள்ளனர்.1970-களில் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கப்படும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில், பிரபாஸின் பிறந்தநாளையொட்டி கடந்த 23 ஆம் தேதி சிறப்பு டீசரை படக்குழு வெளியிட்டது. பிரபாஸின் கதாபாத்திரமான விக்ரமாதித்யா குறித்த இந்த சிறப்பு டீசர் வெளியான ஒரு நாளில் யூடியூபில் 48 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை செய்துள்ளது. இதற்கு முன்னாதாக யஷின் ‘கேஜிஎஃப் 2’ வெளியான 24 மணிநேரத்தில் 68 மில்லியன் பார்வைகளைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.
’கேஜிஎஃப் 2’ படத்திற்கு அடுத்தப்படியாக இந்திய அளவில் ஒரே நாளில் அதிக பார்வைகள் கடந்த இரண்டாவது டீசர் என்ற பெருமையை ‘ராதே ஷ்யாம்’ பெற்றுள்ளது. தற்போதுவரை 62 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 5 லட்சம் லைக்ஸ்களை டீசர் யூடியூபில் குவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3pA2sAW



0 Comments