Ad Code

Responsive Advertisement

ஓடிடியில் வெளியானது சுந்தர் சி-ஆர்யாவின் ‘அரண்மனை 3’

சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘அரண்மனை 3’ இன்று ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.

சுந்தர். சி இயக்கத்தில் வெளியான ’அரண்மனை’, ’அரண்மனை 2’ ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியில் பெரும் வெற்றி அடைந்தன. நகைச்சுவை வகையில் எடுக்கப்பட்ட அந்தப் படங்களின் மூன்றாவது பாகம் ‘அரண்மனை 3’ படத்தை இயக்குனர் சுந்தர். சி  இயக்கியுள்ளார்.

image

ஆர்யா, ராஷி கண்ணா, மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விஜயதசமியை முன்னிட்டு படம் கடந்த அக்டோர்பர் 14 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. தியேட்டர் வெளியீட்டிற்கு பிறகான ஓடிடி உரிமையை ஜீ5 தளம் கைப்பற்றியிருந்தது.  படம் வெளியாகி 1 மாதம் முடியும் நிலையில் இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் ‘அரண்மனை 3’ வெளியாகியுள்ளது.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3ojVM7K

Post a Comment

0 Comments