
’வலிமை’ படத்தை இந்தியிலும் ரிலீஸ் செய்யக்கோரி அஜித்தின் வட இந்திய ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
’வலிமை’ படத்தின் டீசர், முதல் பாடல், கிளிம்ப்ஸ் வெளியான நிலையில் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவித்தார், இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர். சமீபத்தில் வெளியான ‘டாக்டர்’, ‘அண்ணாத்த’ படங்கள் பல மொழிகளில் வெளியாகின. ஆனால், ‘வலிமை’ தமிழில் மட்டும்தான் தற்போது வெளியாகும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அஜித்தின் வட இந்திய ரசிகர்கள் தயாரிப்பாளர் போனி கபூருக்கு ‘வலிமை’ படத்தை இந்தியில் வெளியிட கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

“போனி கபூர் ஜி ’வலிமை’ படத்தை இந்தியில் வெளியிடுங்கள். விரைவில் ‘வலிமை’ இந்தி ட்ரெய்லரையும் வெளியிடுங்கள்” என்று பதிவிட்டு #WeWantValimaiInHindi என்ற ஹேஷ்டேக்கில் கருத்திட்டு வருகிறார்கள். 28 ஆயிரம் ட்வீட்டுகளுக்குமேல் செய்யப்பட்டுள்ளன. மேலும் சில ரசிகர்கள், அஜித் பான் இந்தியா ஸ்டாராக மாற இதுதான் சரியான நேரம். ‘வலிமை’ படத்தை தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கிலும் வெளியிடுங்கள் என்று தொடர்ந்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

இதற்கு முன்னதாக, ’நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3kikG6f



0 Comments