
மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்துகொண்டிருந்த முதல்வரிடம் திருமணம் நடைபெற்றுக்கொண்டிருந்த புதுமணத் தம்பிதிகள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தமிழகம் முழுக்க மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை வெள்ளக்காடாக மிதக்கிறது. இதனால், முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை முழுக்க களத்தில் இறங்கி மழை பாதிப்புப் பகுதிகளை பார்வையிட்டு வருகிறார்.

இன்று காலை வடசென்னை மகாகவி பாரதியார் நகரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கௌரிசங்கர் மகாலட்சுமி தம்பதிக்கு இன்று தான் திருமணம் நடைபெற்று மணக்கோலத்தில் இருந்தனர். அவர்களை பார்த்த முதல்வர் காரில் இருந்து இறங்கி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அன்பளிப்பு கொடுத்தார். மணமக்களும் முதலமைச்சர் காலில் விழுந்து மரியாதை பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வின் போது அமைச்சர் சேகர்பாபு உடனிருந்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3qqe61k



0 Comments