
இயக்குநர் வசந்தபாலனின் ‘ஜெயில்’ படத்தின் ‘நகரோடி’ பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வசந்தபாலன் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் ‘ஜெயில்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். ஜி.வி பிரகாஷுக்கு ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இரண்டு வருடங்களாக வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் இப்படத்தின் உரிமையை சமீபத்தில்தான் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. ஜெயில் படத்தில் இடம்பெற்ற ’காத்தோடு காத்தானன்’ பாடல் மெகா ஹிட் அடித்து இன்றளவும் பலரது ஃபேவரிட் பாடலாக உள்ளது.
இந்த நிலையில், தற்போது ‘நகரோடி’ பாடல் வெளியாகியுள்ளது. நகரமயமாக்கல் என்ற பெயரில் பூர்வகுடிகளை சென்னைக்கு வெளியில் தள்ளி வைக்கும் அரசுகளையும், பூர்வகுடிகளின் வலியையும் அழுத்தமாக பதிவு செய்கிறது. ஜி.வி பிரகாஷ் அனன்யா பாட், தெருக்குரல் அறிவு மூவரும் போட்டிப்போட்டுக்கொண்டு பாடியிருக்கிறார்கள். ஜி.வி பிரகாஷின் குரலும் ’தெருக்குரல்’ அறிவின் குரலும் நம் இதயத்தின் கூடுதல் கவனத்தை ஈர்க்கின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3bSZteL



0 Comments