Ad Code

Responsive Advertisement

மழையால் பாதித்த ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்கிய சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றத்தினர்

நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர் மன்றத்தினர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் தலைநகர் சென்னை மற்ற மாவட்டங்களை விடவும் நீரால் சூழந்து அதிக பாதிப்படைந்துள்ளது. கடந்த நவம்பர் 4 ஆம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீடுகளுக்குள் நீர் புகுந்து பல இடங்களில் வசிக்கும் மக்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

image

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசும் தன்னார்வலர்களும் பேருதவி செய்துவரும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர் மன்றத்தினரும் களத்தில் குதித்துள்ளனர். வெள்ளத்தால் சாலைகளில்கூட தங்க இடமின்றி தவித்துவரும் மக்களுக்கு தேடிச்சென்று உணவு அளித்து வருகின்றனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3EXhiFV

Post a Comment

0 Comments