
விபத்தில் சிக்கி சுய நினைவை இழந்த தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் குணமடைந்ததையடுத்து அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் நடிகர் சிரஞ்சீவி.
தெலுங்கு ’சூப்பர் ஸ்டார்’ சிரஞ்சீவியின் தங்கை விஜய துர்காவின் மகனும் தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவருமான நடிகர் சாய் தரம் தேஜ் சமீபத்தில் ஹைதராபாத்தின் கேபிள் ப்ரிட்ஜில் தனது ஸ்போர்ட்ஸ் பைக்கில் செல்லும்போது விபத்தில் சிக்கினார். உடனடியாக, ஜூப்ளி அப்போலோ மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, தகவல் அறிந்தவுடன் சாய் தரம் தேஜின் மாமாக்கள் சிரஞ்சீவி, நடிகர் பவன் கல்யாண், நடிகர் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பலரும் மருத்துவமனைக்கு வந்து உடல்நிலைக் குறித்து விசாரித்தனர். ”நடிகர் சாய் தரம் தேஜின் மூளை, முதுகெலும்பு உள்ளிட்ட முக்கிய உறுப்புகளில் பெரிய காயங்கள் இல்லை. ஆனால், தோள்பட்டை முதுகெலும்பில் மட்டும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி விபத்தில் சிக்கிய சாய் தரம் தேஜ் இரண்டு மாதங்களுக்குப் பிறகு முழு உடல்நலம் தேறியுள்ளார். நடிகர் சிரஞ்சீவி,அல்லு அர்ஜுன்,பவன் கல்யாண், ராம் சரண்,வைஷ்ணவ் தேஜ், வருண் தேஜ் உள்ளிட்டோர் சாய் தரம் தேஜ் வீட்டிற்குச் சென்று கேக் வெட்டி வாழ்த்தியுள்ளனர். இந்தப் புகைப்படத்தை நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2Yp1jAU



0 Comments