
‘ஜெய் பீம்’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் நடிகர் சிவக்குமார்.
தா.செ.ஞானவேல் எழுதி இயக்கிய ’ஜெய் பீம்’ படத்தை தயாரித்து நடித்துள்ளார் சூர்யா. கடந்த 2 ஆம் தேதி வெளியான இப்படத்தில் ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மைச் சம்பவத்தையே ‘ஜெய் பீம்’ படமாக எடுத்திருக்கிறார்கள். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் அமேசான் பிரைமில் ‘ஜெய் பீம்’ வெளியாகி இந்தியா முழுக்க பாராட்டுகளைக் குவித்து வருகிறது. வேற்று மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், எம்.எல்.ஏக்களும் படத்தை பாராட்டி வருகிறார்கள்.

இவ்வளவு வரவேற்பு கிடைத்திருப்பதால் நடிகர் சிவக்குமார் ’ஜெய் பீம்’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார். இயக்குநர் ஞானவேல், நடிகர் மணிகண்டன், நடிகை லிஜோ மோல், வில்லனாக நடித்த நடிகர் தமிழ், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் உள்ளிட்டோர் நேரில் சென்று சந்தித்துள்ளனர். சிவக்குமாருடன் இருக்கும் புகைப்படத்தை இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/304MsMx



0 Comments