
நடிகர் விஷால் சென்னை மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஆதரவற்ற ஏழைகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கியுள்ளார்.
நடிகர் விஷால் – ஆர்யா நடிப்பில் தீபாவளியையொட்டி வெளியான ‘எனிமி’ பாராட்டுகளை குவித்து வருகிறது. இதன் வெற்றிக் கொண்டாத்தை வழக்கமாக கேக் வெட்டிக் கொண்டாடாமல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை ஆதரவற்ற மக்களுக்கு உணவு கொடுத்து கொண்டாடியிருக்கிறார் விஷால்.

தனது அம்மா தேவி பெயரில் ’தேவி’ என்ற அறக்கட்டளையை ஆரம்பித்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். ஏற்கனவே, இந்த அறக்கட்டளை மூலம் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாலையோர மக்கள் 500 பேருக்கு தினமும் உணவு, குடிநீர் வழங்கி வந்தார்.

வருடந்தோறும் ஏழைகளுக்கு கல்வி உதவியும் செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, தற்போது ‘எனிமி’ வெற்றியடைந்துள்ளதால் தேவி அறக்கட்டளை மூலம் மினி வேன் அமர்த்தி சாலைகளில் வசிக்கும் ஆதரவற்ற ஏழைகளுக்கு உணவும் குடிநீரும் அளித்துள்ளார்.
இந்தப் புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது வெளியாகியுள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3bNPqre



0 Comments