Ad Code

Responsive Advertisement

”ஹிந்தியில் ரீமேக் ஆகும் அந்நியன்” - ஷங்கருடன் இணையும் ரன்வீர் சிங்

இயக்குநர் ஷங்கர் ரீமேக் செய்ய உள்ள ‘அந்நியன்’ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க உள்ளார்.

ஜென்டில்மேன் படம் தொடங்கி எந்திரன் 2 திரைப்படம் வரை தனது தனித்துவமிக்க இயக்கத் திறமையால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருப்பவர் இயக்குநர் ஷங்கர்.

image

இவர் தற்போது அவரது இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற ‘அந்தியன்’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளார். இந்த ரீமேக்கில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க இருக்கிறார். பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்தப்படத்தை பென் ஸ்டூடியோஸ் டாக்டர் ஜெயந்திலால் கடா, காட் ப்ளஸ் எண்டர்டெய்ண்ட்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளார். 2022 மத்திய பகுதியில் படம் திரைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, கமலுடன் இணைந்து ஷங்கர் இயக்கிவந்த  ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஷங்கருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தயாரிப்பு நிறுவனம் இந்தியன் 2 படத்தை நிறைவு செய்யாமல் பிற நிறுவனங்களின் படத்தை ஷங்கர் இயக்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது.

அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், ஷங்கர் இது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. இதற்கிடையே ஷங்கர்  ராம்சரணுடன் படம் ஒன்றில் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3wToPSO

Post a Comment

0 Comments