Ad Code

Responsive Advertisement

நெட்ஃப்ளிக்ஸின் ’டாப் 10’ ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டாப் 10 படங்களில்  இடம் பிடித்துள்ளது.

 ஹீரோ’ படத்திற்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘டாக்டர்’ படத்தில் நடித்திருந்தார். கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட் அடித்து தற்போதுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை உலகம் முழுக்க 100 கோடிக்குமேல் வசூல் செய்துள்ளது. பிரியங்கா அருள்மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார்.யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, தீபா, அர்ச்சனா உள்ளிட்டோர் நடிப்பில் கவனம் ஈர்த்தார்கள்.

image

தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான ‘டாக்டர்’ படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியிருந்தது. ‘டாக்டர்’ படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றியிருந்தது. அதன் அடிப்படையில், கடந்த 5 ஆம் தேதி ‘டாக்டர்’ தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியானது. தெலுங்கில் ‘வருண்’ டாக்டர்’ என்ற பெயரில் வெளியாகி அங்கும் ஹிட் அடித்தது. இந்த நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 படங்களின் வரிசையில் ‘டாக்டர்’ படமும், தெலுங்கில்  ’டாக்டர்’ படத்தின் டப்பிங்கான ‘வருண் டாக்டர் படமும் தற்போது டாப் 10 படங்கள் வரிசையில் இடம்பிடித்துள்ளன. இதனை, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவரது சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3EYzlM3

Post a Comment

0 Comments