Ad Code

Responsive Advertisement

‘விக்ரம்’ படத்தில் பாடல் எழுதியுள்ள கமல்ஹாசன்?

’விக்ரம்’ படத்தில் கமல்ஹாசன் பாடல் எழுதியிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வருடம் கமல்ஹாசனின் பிறந்தநாளின்போது கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘விக்ரம்’ படத்தின் அறிவிப்பும் தலைப்பும் வெளியானது. கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

image
கடந்த ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து இரண்டு வாரங்கள் படக்குழுவிற்கு பிரேக் விடப்பட்டது. இந்த நிலையில், ‘விக்ரம்’ படத்திற்காக ‘பத்தல பத்தல’ என்ற பாடலை கமல்ஹாசன் எழுதியிருப்பதாகவும் சாண்டி மாஸ்டர் கொரியோகிராஃபி செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2ZqcWra

Post a Comment

0 Comments