Ad Code

Responsive Advertisement

ஷங்கர் - ராம் சரண் படத்துக்கு வில்லனாகும் மலையாள நடிகர் சுரேஷ் கோபி?

இயக்குநர் ஷங்கர் - ராம் சரண் இணையும் ‘ராம் சரண் 15’ படத்தில் நடிகர் சுரேஷ் கோபி வில்லனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘ஐ’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார் மலையாள நடிகர் சுரேஷ் கோபி. இந்த நிலையில், மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் ‘ராம் சரண் 15’ படத்தில் சுரேஷ் கோபி இணைந்திருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. மீண்டும் வில்லனாகவே நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

image

முன்னதாக, இயக்குநர் ஷங்கர் ‘ராம் சரண் 15’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ஜானி மாஸ்டர் கொரியோகிராஃபி செய்கிறார். தமன் இசையமைக்கிறார். ராம் சரண் இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 170 கோடியில் இப்படம் உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தொடங்கியது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3midFnB

Post a Comment

0 Comments