Ad Code

Responsive Advertisement

பிக் பாஸ் பட்டம் வென்ற சித்தார்த் சுக்லா மாரடைப்பால் மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல நடிகரும், இந்தி 'பிக் பாஸ்' 13-வது சீசன் வெற்றியாளருமான சித்தார்த் சுக்லா மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 40.
 
இந்தி 'பிக் பாஸ்' 13-வது சீசனில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகர் சித்தார்த் சுக்லா. அவருக்கென்று சமூக வலைதளங்களில் தனிப்பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ள சித்தார்த் சுக்லா, 2 சினிமா படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ‘பலிகா வாது’ என்ற தொடர் தமிழில் ‘மண் வாசனை’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. இதனைத் தொடர்ந்து ‘ஜலக் திக் லாஜா 6’ உள்ளிட்ட சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார்.
 
image
இந்நிலையில் இன்று (செப் 02) காலை திடீரென சித்தார்த் சுக்லாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இளம் வயதில் சித்தார்த் சுக்லா மரணத்தை தழுவியது இந்தி திரையுலகம் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3mZF6TN

Post a Comment

0 Comments