’தலைவி’ திரைப்பட குழுவினருக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’தலைவி’. இதில் கங்கனா மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும், நடிகர் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆராகவும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் 10 ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால், இந்த திரைப்படம் தமிழகத்தில் வெளியாகி 15 நாட்களில் ஓ.டி.டியில் வெளியாகும் என உரிமை வழங்கப்பட்டிருந்தது. இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். திரையரங்கில் வெளியாகி நான்கு வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிடவேண்டும் என்றும் கூறினர். அதற்கான, கடிதம் வழங்கினால் மட்டுமே படத்தை திரையரங்கில் வெளியிடப்படும் எனவும் நிபந்தனை வைத்தனர்.
இதுகுறித்து கடந்த ஒரு வாரமாக திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதில் சுமூக தீர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திரையரங்கில் வெளியாகி நான்கு வாரங்களுக்கு பிறகே தலைவி திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என தயாரிப்பாளர் கடிதம் வழங்கவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்கலாமே: பொய் காரணம் வேண்டாம்: Money Heist வெளியீட்டு நாளில் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த நிறுவனம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3jCkWwW
0 Comments