
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார் நடிகர் கார்த்தி.
’சுல்தான்’ படத்திற்குப் பிறகு நடிகர் கார்த்தி மணிரத்னம் இயக்கும் ’பொன்னியின் செல்வன்’, மித்ரன் இயக்கத்தில் ’சர்தார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக வெளியாகும் ’பொன்னியின் செல்வன்’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இன்னும் 30 நாட்களில் முழு படப்பிடிப்பும் நிறைவடையும் எனு கூறப்படுகிறது.
இந்த நிலையில், முத்தையா இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். ஏற்கனவே, கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘கொம்பன்’ படத்தில் கார்த்தி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பை முடித்தப்பிறகு முத்தையா படத்தின் பணிகள் தொடங்கவிருக்கின்றன.
ஏற்கனவே, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ’சர்தார்’ படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்றது. எனவே, ’பொன்னியின் செல்வன்’ படத்தை முடித்த கையோடு ’சர்தார்’ படத்தில் கார்த்தி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முத்தையா திரைப்படத்தை முடித்த பிறகே ’சர்தார்’ படத்தில் கார்த்தி நடிப்பார் என கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3ivdhQH



0 Comments