
இயக்குநர் வசந்தபாலன் இயக்கும் படத்தில் இணைந்திருக்கிறார் வனிதா விஜயகுமார்.
கடந்த 2014 வெளியான ‘காவியத் தலைவன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் வசந்தபாலன் ‘ஜெயில்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்த நிலையில், ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘அந்தகாரம்’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த அர்ஜுன் தாஸை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார் வசந்தபாலன். இந்தப் படத்தை தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து ’யூ பாய்ஸ் ஸ்டூடியோஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார் வசந்தபாலன்.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகை வனிதா விஜயகுமார் இணைந்திருக்கிறார். இதனை, வசந்தபாலன் அதிகாரபூர்வமாக முக்கியமான கதாபாத்திரத்தில் வனிதா நடிக்கிறார் என்று அறிவித்திருக்கிறார். நடிகை வனிதா விஜயகுமார் பிரஷாந்த்தின் ‘அந்தகன்’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3yyef4f



0 Comments