
நடிகை நிதி அகர்வால் தனது பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடி சிறப்பித்துள்ளார்.
ஜெயம் ரவியின் ‘பூமி’, சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படங்களில் ஹீரோயினாக நடித்த நிதி அகர்வால் தற்போது, மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். நேற்று ஆகஸ்ட் 17 ஆம் தேதி நிதி அகர்வாலின் 28 வது பிறந்தநாள்.

இதனையொட்டி, ஆதரவற்றோர் இல்லத்திற்குச் சென்ற நடிகை நிதி அகர்வால், ஆதரவற்ற முதியோர்களுடன் உற்சாகமுடன் கைக்குலுக்கி பேசி மகிழ்ந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

அதோடு, அங்குள்ள முதியோர்களுக்கும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கும் தானே உணவு பரிமாறி மகிழ்ச்சியூட்டினார்.

ஆதவற்றவர்களுடன் பிறந்தநாளைக் கொண்டாடிய நிதி அகர்வாலின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3gcncZE



0 Comments