
மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் தொடங்கவுள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். இதற்கான படப்பிடிப்பு தாய்லாந்து, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றன. இந்த நிலையில், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு கடந்தவாரம் நிறைவடைந்ததையொட்டி தற்போது படக்குழுவினர் மத்திய பிரதேச மாநிலம் ஓர்ச்சாவுக்கு அடுத்தக்கட்டப் படப்பிடிப்பை நடத்த சென்றுள்ளனர். மிகவும் பழமையான நகரமான ஓர்ச்சா மத்திய பிரதேசத்தின் அரண்மனை நகரம் என்று அழைக்கப்படுகிறது. முழுக்க முழுக்க அரண்மனைகளும் கோவில்களுமே நிரம்பியுள்ள இங்குதான், தற்போது படக்குழுவினர் சென்றுள்ளனர்.
BACK to work .. landed in Gwalior with #Maniratnam sir @Karthi_Offl on our way to Orchha for #PonniyinSelvan .. pic.twitter.com/0RjfonSc4l
— Prakash Raj (@prakashraaj) August 18, 2021
நடிகர் கார்த்தி, இயக்குநர் மணிரத்னத்துடன் பிரகாஷ் ராஜ் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுவரை 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3jX5rig



0 Comments