
சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'டிக்கிலோனா' திரைப்படம் ஜீ 5 தளத்தில் வெளியாக உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்திக் யோகி என்ற புதுமுக இயக்குனர் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் 'டிக்கிலோனா'.

இந்தப்படத்தில் மூன்று விதமான தோற்றத்தில் சந்தானம் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் காலத்தை கடந்து செல்லும் கதை களம் என்றும் கூறுகின்றனர். இந்த படத்திற்கான அனைத்து வேலைகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. ஆனால் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற சந்தேகம் நீடிப்பதால் நேரடியாக ஓ.டி.டியில் வெளியிட தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இதற்காக ஜீ 5 நிறுவனத்திடம் பேசி உள்ளனர் எனக் கூறப்படுகிறது. மேலும் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. 'டிக்கிலோனா' ஓ.டி.டி வெளியீடு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3AbOAyz



0 Comments