Ad Code

Responsive Advertisement

ஓடிடியில் நேரடியாக வெளியாகும் நடிகர் சூர்யா தயாரித்துள்ள 4 திரைப்படங்கள்

சூர்யா தயாரிப்பில் உருவாகியுள்ள 4 திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகின்றன.

நடிகர் சூர்யா தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அதில், தற்போது ஞானவேல் என்பவர் இயக்கத்தில் ஜெய் பீம் என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்திருக்கிறார். அதேபோல் சசிகுமார் - ஜோதிகா நடிப்பில் உடன்பிறப்பே, அருண் விஜய் நடிப்பில் ஓ மை டாக் (Oh My Dog), ரம்யா பாண்டியன் நடிப்பில் 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

இந்தப் படங்களின் வேலைகள் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. ஆனால், திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் இந்த நான்கு திரைப்படங்களையும் நேரடியாக அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியிட சூர்யா முடிவெடுத்துள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' செப்டம்பர் மாதமும், 'உடன்பிறப்பே' அக்டோபர் மாதமும், 'ஜெய் பீம்' நவம்பர் மாதமும், 'ஓ மை டாக்' டிசம்பர் மாதமும் வெளியாக உள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3Ae8HMM

Post a Comment

0 Comments