Ad Code

Responsive Advertisement

வேஷ்டி சட்டையில் கவனம் ஈர்க்கும் தனுஷ்: பூஜையுடன் தொடங்கிய ‘தனுஷ்44’ படத்தின் படப்பிடிப்பு

’தனுஷ் 44’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

கார்த்திக் நரேனின் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘தனுஷ் 44’ படத்தில் நடிக்கிறார். தனுஷுடன் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார்.

image

இப்படத்தின், படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. வேஷ்டி சட்டையில் தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நடிகை நித்யா மேனன் உள்ளிட்டோர் பூஜையில் கலந்துகொண்டுள்ளனர். இந்த புகைப்படங்களை தனுஷ் ரசிகர்கள் பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
இன்று மாலை 6 மணிக்கு ’தனுஷ் 44’ படத்தின் டைட்டில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3A7dxLu

Post a Comment

0 Comments