
துபாயில் நடக்கும் ‘அமெரிக்கி பண்டிட்’ படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் மாதவன் தனியொரு ஆளாக விமானத்தில் பயணித்த வீடியோவையும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை தென்னிந்திய மொழிகளில் மட்டும் நடித்துவரும் மஞ்சு வாரியர் முதன்முறையாக அறிமுக இயக்குநர் கல்பேஷ் இயக்கத்தில் பாலிவுட்டில் மாதவனுக்கு ஜோடியாக ’அமெரிக்கி பண்டிட்’ படத்தில் அறிமுகமாகிறார். கொரோனா ஊரடங்கிற்கு முன்பு போபாலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது.

துபாயில் நடைபெற்றுவரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகர் மாதவன் பயணிகளே இல்லாமல், தனியொரு ஆளாக விமானத்தில் துபாய் பயணம் செய்துள்ளார். தனது இன்ஸ்டாகிராமில் அருகில் யாரும் இல்லாமல் பெரிய விமானத்தில் தனியாளாக பயணம் செய்யும் மாதவன் “ஒருபுறம் தனி ஆளாக பயணிப்பது ஆச்சர்யமாக இருந்தாலும் மற்றொரு புறம் சோகமாக இருக்கிறது. கொரோனா காலம் விரைவில் முடிவுக்கு வர பிராத்தனை செய்வோம்” என்று கூறியுள்ளார்.
Strangest flight ever. …https://t.co/YW9v2KTahX pic.twitter.com/OpjiUo2jC8
— Ranganathan Madhavan (@ActorMadhavan) August 11, 2021
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/37xFRKK



0 Comments