
சமீபத்தில் மலையாளத்தில் வெற்றி பெற்ற ’நாயட்டு’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நிமிஷா சஜயன் கதாபத்திரத்தில் நடிகை அஞ்சலி நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான மலையாளப் படம் ‘நாயட்டு’ மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு என தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுக்களைக் குவித்தது. நிமிஷா சஜயன், ஜோஜு ஜார்ஜ், குஞ்சாக்கோ போபன் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தை, இயக்குநர் மார்டின் பிரகாட் இயக்கியிருந்தார். காவல்துறையில் பணிபுரிந்தாலும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறார்கள் என்ற கதைக்களத்தை கொண்ட ’நாயட்டு’ பெரும் வரவேற்பை பெறவே, தெலுங்கின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் இப்படத்தை தெலுங்கில் அதிகாரபூர்வமாக தயாரிக்கவிருக்கிறார். தமிழில் கெளதம் மேனன் இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் காவலராக நடித்து நடிப்பில் கவனம் ஈர்த்த நிமிஷா சஜயன் நடிப்பில் கவனம் ஈர்த்திருந்தார். இந்த நிலையில், நிமிஷா சஜயன் கதாபாத்திரத்தில் நடிகை அஞ்சலி ’நாயட்டு’ தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
நிமிஷா சஜயன் நடிப்பில் இந்த ஒரே ஆண்டில், ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ’நாயட்டு’, ’மாலிக்’ உள்ளிட்டப் படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3s5jtlo



0 Comments