
காஷ்மீர் காட்சியை ‘பீஸ்ட்’ படத்திற்காக படக்குழுவினர் ஜார்ஜியாவில் செட்டிங்ஸ் மூலம் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்துள்ளார்கள். அனிருத் இசையமைகிறார். இப்படத்தின் முதற்கட்பட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. ஏப்ரல் 7 ஆம் தேதியன்று ஜார்ஜியா புறப்பட்டார் விஜய். சில நாட்கள் அங்கு ஷூட்டிங் நடைபெற்ற நிலையில், மழையின் காரணமாக படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் சென்னை திரும்பியது படக்குழு. இதனால், மீதமுள்ள படப்பிடிப்பை இம்மாத இறுதியில் ஜார்ஜியா சென்று படமாக்கவுள்ளனர்.

படத்தில் விஜய் ராணுவ வீரராக நடிக்கிறார் என்றும் தீவிரவாதிகளிடம் சிக்கும் மக்களை மீட்பதுதான் ‘பீஸ்ட்’ படத்தின் கதை என்றும் சொல்லப்படுகிறது. இதுவரை 85 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பை காஷ்மீரில் எடுக்கத்திட்டமிட்டிருந்தனர். ஆனால், அங்கு பாதுகாப்பு காரணங்களால் எடுப்பதில் சிக்கல் என்பதை அறிந்து காஷ்மீர், மற்றும் இந்தியா பாகிஸ்தான் எல்லையை செட்டிங்ஸ் மூலம் ஜார்ஜியாவில் எடுக்கவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3C63SFC



0 Comments