Ad Code

Responsive Advertisement

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் மிர்ச்சி சிவாவின் 'காசேதான் கடவுளடா'

ஆர்.கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிக்கும் ’காசேதான் கடவுளடா’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

சித்ராலயா கோபு இயக்கத்தில் முத்துராமன், லட்சுமி நடிப்பில் கடந்த 1972-ஆம் ஆண்டு வெளியான 'காசேதான் கடவுளடா' நகைச்சுவை திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை மிர்ச்சி சிவா நடிப்பில் இயக்குநர் ஆர்.கண்ணன் தற்போது அதிகாரபூர்வமாக ரீமேக் செய்கிறார். பிரியா ஆனந்த் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஜூலை 16-ஆம் தேதி தொடங்கிய நிலையில், விறுவிறுப்புடன் 80 சதவீத படப்பிடிப்பை முடித்து இறுதிக்கட்டப் படப்பிடிப்பை நடத்தி வருகிறது படக்குழு.

image

மிர்ச்சி சிவாவுடன் ஊர்வசி, யோகி பாபு, கருணாகரன், மனோ பாலா, தலைவாசல் விஜய், 'குக் வித் கோமாளி' புகழ், சிவாங்கி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். என். கண்ணன் இசையமைக்கிறார்.

image

சமீபத்தில் கவனம் ஈர்த்த 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' ரீமேக்கையும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3fTgU14

Post a Comment

0 Comments