
நயன்தாரா நடித்துள்ள ’நெற்றிக்கண்’ படத்தின் டைட்டில் பாடல் வெளியாகியுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘அவள்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மிலிந்த் ராவ், நயன்தாராவை வைத்து ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இப்படத்தில் பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்துள்ள நயன்தாரா, பார்வை குறைபாடு இருந்தாலும் தனது அறிவாற்றலால் கொடூரமான சைக்கோ கில்லரை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதைக்களம்.
‘நெற்றிக்கண்’ வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகவிருக்கிறது. படத்தில் கொடூர சைக்கோ வில்லனாக அஜ்மல் நடிக்கிறார்.

இந்த நிலையில், படத்தின் முதல் பாடலான ‘பார்த்தவை மறந்து போகலாம்’ பாடல் வெளியாகி இருக்கிறது. பூர்வி குரலில் கம்பீரமாய் ஒலிக்கும் பாடலே படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டுகிறது. இப்பாடலை விக்னேஷ் சிவன் எழுதியிருக்கிறார். ஏற்கனவே, இப்படத்தின் ‘இதுவும் கடந்து போகும்’ பாடல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3AfL2LF



0 Comments