
பிக்பாஸ்’ புகழ் முகேன் ராவ் நடிக்கும் ‘வேலன்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
’பிக்பாஸ்’ மூலம் கவனம் ஈர்த்த முகேன் ராவ் நடிக்கும் ‘வேலன்’ படத்தை கவின் இயக்குகிறார். பிரபு, சூரி, தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சூரி மலையாளியாக நடிக்கிறார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் டப்பிங் பணிகளும் முடிந்துள்ளது.
சமீபத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், இன்று மோஷன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இதனை, நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். சீனு ராமசாமியின் ‘இடிமுழக்கம்’ படத்தை தயாரிக்கும் கலைமகன் தான் இப்படத்தையும் தயாரிக்கிறார். மோஷன் போஸ்டர் வீடியோ ‘வேலன்’ நகைச்சுவைக் கலந்த குடும்பத் திரைப்படம் என்பதை உணர்த்துகிறது.

முகேன் ராவ் ‘வெற்றி’ என்றப் படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை, கடந்த 2011 ஆம் ஆண்டு நானி, நித்யாமேனன் நடிப்பில் வெளியான ‘வெப்பம்’ படத்தின் இயக்குநரும் கெளதம் மேனனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த அஞ்சனா அலிகான் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3AK0W1s



0 Comments