
’வலிமை’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடியாத நிலையில் தள்ளிப்போனது. தற்போது படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளதால், சமீபத்தில் முக்கியமான இணைப்புக் காட்சிகளை ஹைதராபாத்தில் எடுத்து முடித்தது படக்குழு. இன்னும் படத்தின் முக்கியமான சண்டைக் காட்சி மட்டும் எடுக்கப்படாமல் இருக்கிறது.

இந்த சண்டைக் காட்சிக்காக அஜித் உள்ளிட்ட 'வலிமை' படக்குழுவினர் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளனர். வரும் 20-ஆம் தேதி முதல் ரஷ்யாவில் தொடங்கும் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியும், இறுதிக்கட்டப் படப்பிடிப்பையும் முடிக்கவுள்ளனர் படக்குழுவினர் என்று தகவல் வெளியாகி உள்ளது. அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3CPLHph



0 Comments