Ad Code

Responsive Advertisement

சென்னை: ‘பீஸ்ட்’ படப்பிடிப்பில் இணைந்த நடிகர் யோகிபாபு

இன்று முதல் விஜய்யின் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பில் இணைந்துள்ளார் நடிகர் யோகி பாபு.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. அதனையடுத்து, சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் அரங்கம் அமைத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தினர். இந்த நிலையில், தற்போது சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். செல்வராகவன் வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இன்று முதல் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார் நடிகர் யோகி பாபு. ’அருண் விஜய் 33’படப்பிடிப்புக்காக ராமேஸ்வரத்தில் இருந்த யோகி பாபு, தற்போது சென்னை திரும்பியுள்ளார். ரசிகர் ஒருவர் ட்விட்டரில் ‘பீஸ்ட்’ படத்தில் எப்போது இணைவீர்கள் என்று நேற்றிரவு கேட்ட கேள்விக்கு, யோகிபாபு ’நாளை முதல்’ என்று அப்டேட் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

image

'வேலாயுதம்', 'மெர்சல்', 'சர்கார்', 'பிகில்' உள்ளிட்ட படங்களில் விஜய்யுடன் யோகிபாபு நடித்திருந்தார். அதேபோல, நெல்சன் திலீப்குமார் முதன்முதலாக இயக்கிய 'கோலமாவு கோகிலா' படத்திலும் யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நெல்சனின் இரண்டாவது படமான 'டாக்டர்' படத்திலும் சிவகார்த்திகேயனுடன் நடித்திருக்கும் யோகிபாபு, மூன்றாவதாகவும் ’பீஸ்ட்’ படத்தில் இணைந்துள்ளார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3CzGvpH

Post a Comment

0 Comments