Ad Code

Responsive Advertisement

“தியேட்டரில் மட்டும்தான்”- ரூ.250 கோடிக்கு கேட்ட ஓடிடி தளம் ; மறுத்த ’கேஜிஎஃப் 2’ படக்குழு

’கேஜிஎஃப் 2’ படத்தை பிரபல ஓடிடி தளம் 250 கோடிக்கு கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது ’கேஜிஎஃப் 2’ இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். யஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேஜிஎஃப் 2’ டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த ஜூலை மாதம் 16-ஆம் தேதி ‘கேஜிஎஃப் 2’ உலகம் முழுக்க வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தது படக்குழு. ஆனால், கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா என பல மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால்,‘கேஜிஎஃப் 2’ புதிய வெளியீட்டு தேதி விரைவில் தெரிவிக்கப்படும் என்று இயக்குநர் பிரஷாந்த் அறிவித்திருந்தார்.

image

இந்த நிலையில், முன்னணி ஓடிடி தளம் ‘கேஜிஎஃப் 2’ படத்தை 250 கோடிக்கு நேரடியாக வெளியிட கேட்டுள்ளது. இதற்கு, நடிகர் யஷும் தயாரிப்பு நிறுவனமும் எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை. தியேட்டரில் மட்டுமே ’கேஜிஎஃப் 2’ படத்தை ரசிகர்கள் ரசிக்கவேண்டும்” என்று ஓடிடி தளத்துக்கு உறுதியாக மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3xys69f

Post a Comment

0 Comments