Ad Code

Responsive Advertisement

சூர்யாவைத் தவிர வேறு யாரையும் அதில் கற்பனைகூட செய்யவில்லை: மனம்திறந்த கெளதம் மேனன்

நவரசா ஆந்தாலஜி படத்தில் ’கிடார் கம்பி மேலே நின்று’குறும்படத்தை இயக்கியுள்ள கெளதம் மேனன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக இயக்குநர் மணிரத்னமும், ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் இணைந்து தயாரிக்கும் ஆந்தாலஜி படமான ‘நவரசா’ ஒன்பது குறும்படங்களை உள்ளடக்கியது. இதில், கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யாவும் ப்ரக்யா ரோஸ் மார்ட்டினும் ’கிடார் கம்பி மேலே நின்று’ குறும்படத்தில் நடித்துள்ளார்கள். முழுக்க முழுக்க காதல் கதை என்று சொல்லப்படுகிறது.

image

இந்த நிலையில், கெளதம் மேனன் சூர்யா மற்றும் நடிகை பிரக்யா ரோஸ் மார்ட்டினுடனான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். ”இந்தக் கதாபாத்திரத்திற்கு நடிகர் சூர்யாதான் எனது முதல் தேர்வாக இருந்தார். இப்பாத்திரத்தில் வேறு யாரும் நடிப்பதை நான் கற்பனை கூட செய்யவில்லை. அவருடன் இணைந்து பணியாற்ற மிக நீண்ட காலமாக காத்திருக்கிறேன். இந்தப்படம் அதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. திரையிலும் அது மிக அழகாக வெளிப்பட்டுள்ளது” என்று கூறியவர்,

image

”கமலின் வாழ்க்கையில் நேத்ரா புத்தம் புதிய சுவாச காற்றாக, வசந்தம்போல வருகிறாள். அவளின் குணம் நம் மனதில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் வகையிலானது. ப்ரக்யா ரோஸ் மார்ட்டின் இந்த கதாபாத்திரத்தை மிக அற்புதமான முறையில் நடித்துள்ளார்.

அவர் பேசும் விதம், தோற்றமளிக்கும் விதம், தலைமுடியுடன் விளையாடும் விதம், இந்த குணங்கள் வெறும் உடல் ரீதியானவை அல்ல. இதெல்லாம் கதாப்பத்திரத்தின் மனதோடு இணைந்தவை. அவர் இசையைப் பற்றி பேசிய விதமும் கதாபாத்திரத்துடன் இணைந்து கொண்ட விதமும் மிகுந்த ஆச்சர்யம் தருவதாக இருந்தது. திரையில் அது எப்படி வெளிப்படுகிறது என்பதை காண ஆவலுடன் உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2Uq4tm4

Post a Comment

0 Comments